எலிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு- யாழில் துயரம்!

யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிக்காய்ச்சல் காரணமாக நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குறித்த நபர் உயிரிழந்தார்.

அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply