முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றினர்.
இதன்போது குறித்த முன்னாள் கொமாண்டோ படைவீரரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டு, அவற்றை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
