மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் நடந்தது.
இதன்போது, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் அன்று இரவு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 46 மற்றும் 43 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை, குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
