இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (20) இரவு யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
