மத்திய மாகாணத்தைத் தளமாகக் கொண்டு 42 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் சன் மேட்ச் நிறுவனம் தனது ‘சூர்யா’ (Soorya) வர்த்தக நாமத்தை ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 (JITF)’ இன் ‘வெள்ளி அனுசரணையாளராக (Silver Sponsor) அறிவித்துள்ளது.
இந்த வர்த்தகக் கண்காட்சி 2026 ஜனவரி 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி’ எனப் பொதுவாக அறியப்படும் இந்த நிகழ்வு, வட மாகாணத்தின் மிக முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகும்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வணிக நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைக்கும் இந்தக் கண்காட்சி புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்துவதோடு, பிராந்திய பொருளாதார இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் மேடையாகவும் விளங்குகிறது.
‘சூர்யா’ -பல தலைமுறைகளாக யாழ்ப்பாண மக்களின் இல்லங்களில் நம்பிக்கைக்குரிய பெயராக நிலைத்து நிற்கும் ஒரு குடும்பப் பயன்பாட்டு வரத்தக நாமமாகும். தரம், நம்பகத்தன்மை மற்றும் தினசரி பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் இந்தப் வர்த்தக நாமம் மூலம், சன் மேட்ச் நிறுவனம் வடக்கு மக்களுடனான தன் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக சன் மேட்ச் கம்பெனியின் நிறைவேற்று இயக்குநர் திருமதி கௌரி ராஜன் கருத்துத் தெரிவிக்கையில்,
‘சூர்யா’என்பது தரம், நம்பகத்தன்மை மற்றும் அன்றாட வாழ்க்கைக்கான வசதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வர்த்தக நாமமாகும். யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எங்களது பங்கேற்பு, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுடன் நெருக்கமான தொடர்பை வளர்த்தெடுப்பதோடு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கும் எங்களது நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது” என தெரிவித்தார்.
வர்த்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் அனைவரும் ‘சூர்யா குழுவினரை காட்சிக்கூடம் இலக்கம் 18 மற்றும் 115 இல் சந்தித்து, நிறுவனத்தின் முழுமையான தயாரிப்பு வரிசையையும், வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட புதுமையான அணுகுமுறைகளையும் நேரடியாக அறிந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026க்கு வழங்கும் ஆதரவின் மூலம் ‘சன் மேட்ச் நிறுவனம், இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான ஒரு வர்த்தக நாமமாக தன்னை உறுதிப்படுத்துகிறது. இன்றும், வருங்காலத்திலும் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் சமூகங்களை ஒளிரச் செய்யும் தனது அர்ப்பணிப்பை இந்த ஆதரவு மீண்டும் வலியுறுத்துகிறது.
