ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (22) அதிகாலை இடம்பெற்றது.

மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பொலிஸார் சோதனையிட்ட வேளையில் அவர்களிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான நபர்களிள் ஒருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18,000 ரூபா பணம் என்பனவும், மற்றைய சந்தேக நபரிடமிருந்து மேலும் 201 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply