யாழ். வடமராட்சி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு- விசாரணைகள் ஆரம்பம்!

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

புலனாய்வு துறையினரால் நேற்றையதினம் (21) பிற்பகல் 8:30 மணியளவில் பாதுகாப்பான முறையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டு மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply