நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன வழமைப்போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply