மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான போது சந்தேக நபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது, 210 லீட்டர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் அழிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
