முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று (23) நீதிமன்றுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வேளையிலேயே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply