நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக மூன்று நபர்களால் இந்த கொலைச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply