அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளையிலிருந்து கிரவனாகம வரை பயணித்த தனியார் பேருந்தும், கிரவனாகமவிலிருந்து பண்டாரவளை வரை பயணித்த அரச பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்துகளில் பயணித்த 6 பயணிகள் காயமடைந்து ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply