அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்துவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
