அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கும், கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய காரணத்தால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
