வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு!

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான முடிவு இன்று (28) அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் இல்லாத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட 05 விடயங்களை முன்நிறுத்தி, கடந்த திங்கட்கிழமை காலை முதல் அச்சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply