நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிவுல் ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய தூதுவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் முளைத்துள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் கனடா தூதுவருக்குச் சிறீதரன் எம்.பி. தெளிவுபடுத்தியிருந்தார்.
மேலும் இந்த சந்திப்பின்போது கனடா தூதுவர் இஸபெல்லா மார்ட்டினுக்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் சிறீதரன் எம்.பியால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
