பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி நான்காவது நாளாக கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் என்பவரின் உடல்நிலை மோசமான காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.
இதன் போது உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
