சட்டவிரோத சிகரட்டுகளுடன் தமிழர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

கைதான நபரிடம் இருந்து 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply