பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தமானது இன்றையதினம் (30) சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதன்படி இந்த சம்பள கொடுப்பனவுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
