மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!

மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடிதரமுல்ல மற்றும் பனலிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 24 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பிரதான சந்தேக நபரின் வீட்டில் இருந்து இந்த போதை மாத்திரை தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் குளியலறையில் இருந்த சலவை இயந்திரத்திற்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதை மாத்திரைகள் அடங்கிய 20 பொதிகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் நீண்ட காலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

10 போதை மாத்திரைகள் அடங்கிய 10 அட்டைகளைக் கொண்ட ஒரு பொதியினை 10,000 ரூபாவிற்கு சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply