வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (30) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply