சட்டவிரோதமான முறையில் ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (28) திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் 117 ஆமை முட்டைகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் ஆமை முட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனஜீவிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
