ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் தம்மால் வர முடியாது எனவும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்குமாறும் தனது சட்டத்தரணி ஊடாக அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும், ஷிராந்தி ராஜபக்சவை இன்றைய தினமே மீண்டும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply