லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை!

லிபியாவின் முன்னாள் தலைவர் முஹம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

லிபியாவின் முன்னாள் தலைவர் முஹம்மர் கடாபி லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.

கடாபி கொல்லப்பட்டப் பின்னர் லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக கடாபியின் 2ஆவது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2021ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, லிபியாவின் சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்தார். அவரது பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டிற்குள் நேற்று மதியம் 2 மணிக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது.

அந்த கும்பல் வீட்டிற்குள் இருந்த சைப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply