இந்திய அரசின் அனுசரணையுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புனித தாதுக்கள்!

78ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் புனித தாதுக்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புனித தாதுக்கள் இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

இவை இன்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply