அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும்- சுற்றாடல் அமைச்சர்!

கம்பளை – அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றாடல் பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

அம்புலுவாவ பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக குறித்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இத்திட்டம் தொடர்பான முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply