நாடாளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது.

இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply