போதைப்பொருள் தொகையுடன் கைதான பெண்!

பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் வீடமைப்புத் தொகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடொன்றைப் பெற்றுத் தங்கியிருந்த வேளையில் நேற்று (05) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான பெண்ணிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட 17 கிலோ கிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவருக்கு எதிராக ஏற்கனவே 4 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply