மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பலி!

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மக்களுமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலகா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply