கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய களனி பாலம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபரிடம் இருந்து 25 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
