போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறான சாரதிகளின் பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை எந்தவொரு வகையிலும் பணியமர்த்த வேண்டாம் என்று அமைச்சர் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

போதைப் பொருள் பாவனையின் கீழ் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மத்தியில் தற்போது சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளுக்கு கூடுதலாக உமிழ்நீர் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே போதைப் பொருள் பாவகையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை அடையாளம் காணும் திட்டத்தை வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு நடமாடும் ஆய்வகங்களை இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply