கட்டுநாயக்க பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து- ஊழியர் ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply