துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்- சட்டரீதியான் வயது உறுதி!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் வயது 17 என்பது உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற இளைஞன் உயிரிழந்தான்.

இந்த விவகாரம் தொடர்பில் 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன என உறுதியாகியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply