கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply