கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை நேற்று விடுத்தது.

சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply