காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சோகம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரில் காட்டுயானை ஊடுருவி இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கிராமத்திற்குள் 2 காட்டுயானைகள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply