2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது.
நாளை (17) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய நிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
