நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றப் பணிகளிலிருந்து இன்றையதினம் சட்டத்தரணிகள் விலகியிருக்கத் தீர்மானித்திருந்தமையே இதற்குக் காரணமாகும்.

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இலங்கையில் றக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபரினால் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply