அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினமும் (15), இன்றையதினமும் (16) காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கைதானவர்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply