நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய விலைகள் அறிவிப்பு!

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த இது தொடர்பில் விளக்கமளித்தார்.

அதன்படி ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

மேலும் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply