கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு காட்டப்பட்ட பாகுபாடு நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது- அமைச்சர் சந்திரசேகர்!

கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு காட்டப்பட்ட பாகுபாடு நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்க்கையில்,

மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இனரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயல்பட்டனர்.
இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவை இல்லை.” எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்டிருந்த நாட்டை தற்போதே கட்டியெழுப்பி புதிய அத்தியாயத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து பயணிக்ககூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு கடந்தகாலங்களில் பாகுபாடு காட்டப்பட்டது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எவருக்கும் பிரிவினை காட்டப்படுவதில்லை.

கடந்த 200 வருடங்களாக இந்நாட்டுக்கு மலையக மக்கள் உழைத்தனர். அந்த சமூகம் தொடர்பில் கடந்தகாலங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்காக குரல் எழுப்படவில்லை.

இந்நிலைமையும் மாற்றப்பட்டுள்ளது. மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளுவதற்கு முற்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

எனினும், இனவாதம் மற்றும் மவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம்- என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply