முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட, முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்றையதினம் கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர்அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply