ஏத்கால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி வீதியின் நாகொல்ல பகுதியில் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏத்கால பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
