யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்படுள்ளார்.

ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்ட நிலையில், புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார்.

அதேவேளை தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிப்பதால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக கூற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply