கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கோடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழிப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான நபரிடம் இருந்து 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
