பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் உயிரிழப்பு!

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் குளிப்பதற்காக பானம குளத்திற்குச் சென்றுவிட்டு, தனது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாடிக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பானம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply