ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
