தெற்கு சைப்ரஸில் உள்ள பிரித்தானிய எல்லைக்குட்பட்ட இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

தெற்கு சைப்ரஸில் உள்ள பிரித்தானிய எல்லைக்குட்பட்ட இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலைட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் சிறிய அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டதாக நிகோஸ் கிறிஸ்டோடௌலைட்ஸ் தமது எக்ஸ் (X) கணக்கில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தாம் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக சைப்ரஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் சைப்ரஸ் பங்குபெற விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அக்ரோதிரி தளத்திலிருந்து அங்குள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply