போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதான பெண்ணிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 410,470 ரூபாய் பணத்துடன் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
