டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 800 லீட்டர் டீசல் மற்றும் டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply